நாடாளுமன்ற உரையில் மேக் கின் இந்தியா என்ற திட்டம் பற்றி பிரதமர் மோடி குறிப்பிடாதது குறித்து பாஜகவை சாடி உள்ள ராகுல் காந்தி, பிரதமரே உங்கள் நாடாளுமன்ற உரையில், மேக் இன் இந்தியா திட்டத்தை குறிப்பிடவே இல்லை. இந்த திட்டம் நல்ல முயற்சியாக இருந்தாலும் தோல்வி அடைந்துள்ளது என்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும். 60 வருடங்களில் நாட்டின் ஜிடிபி யில் உற்பத்தியின் பங்கு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இந்திய இளைஞர்களுக்கு வேலை என்பது மிக முக்கியமான தேவையாக உள்ளது. சமீபகாலமாக எந்த அரசாங்கமும் இந்த தேசிய பிரச்சனையை எதிர்கொள்ள முடியவில்லை.

நம்முடைய உற்பத்தி துறையை பின்னுக்குத் தள்ளி வைப்பது எது என்பதை கண்டறியவும் எதிர்கால உலக பொருளாதாரத்தில் போட்டியிடுவதற்கும் நமக்கு தொலைநோக்குப் பார்வை தேவை. இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்கும் தொலைநோக்குப் பார்வை, மின்சார மோட்டார்கள், பேட்டரிகள், ஆப்டிக்ஸ் மற்றும் ஏஐ போன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் குறிப்பிட்ட கவனம் செலுத்துவது தான் நல்லது. இதுதான் நம்முடைய உற்பத்தி துறையை புதுப்பிப்பதற்கு ஒரே வழி. அதிநவீன உற்பத்தி திறனை வளர்த்து நமக்கு தேவையான வேலைகளை உருவாக்குவோம். சீனா நம்மை பத்து ஆண்டுகள் முந்தி செல்லும் விதமாக வலுவான தொழில்துறை அமைப்பை கொண்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.