
இஸ்ரேல் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கும் மேலாக காசாவில் போர்த்தொடுத்து வரும் நிலையில் ரஃபா பகுதியை கைப்பற்றியுள்ளது. இதனால் பாலஸ்தீனியர்களுக்கு சர்வதேச நாடுகள் மூலம் கிடைக்கும் உதவிகள் சரிவர கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக தலைக்கு தேய்க்கும் ஷாம்பு, சோப்பு, எண்ணெய் போன்ற எந்த ஒரு பொருட்களும் கிடைப்பதில்லை. குறிப்பாக தலைசீவ சீப்பு கூட கிடைப்பதில்லை.
இதனால் அங்குள்ள சிறுமிகள் சீப்பு இல்லாததால் தலைமுடியை ஒழுங்குபடுத்த முடியவில்லை என அந்தப் பகுதியில் குழந்தைகளுக்கான நோய்கள் தொடர்பாக பார்க்கும் மருத்துவரிடம் கூறியுள்ளனர். இதனால் அவர் தலைமுடியை வெட்டிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பொதுவாக சிறுவர்கள் முடிவெட்டிக் கொள்ளும் நிலையில் தற்போது சிறுமிகளும் முடி வெட்டி கொள்கிறார்கள். அந்த பகுதியில் போதுமான தூய்மைப் பணிகளும் இல்லை. இதனால் அங்கு தொற்று நோய் பரவி வருகிறது. மேலும் இதனால் குழந்தைகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.