நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் இருக்கிறார். இவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியதாக சமீப காலமாக செய்திகள் பரவி வரும் நிலையில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் 3-ம் தேதி ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகியதாக கூறப்படுவது உறுதி ஆகியுள்ள நிலையில் இது கட்சி வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சமீப காலமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அவர்கள் சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாக விலகுவதாக கூறும் நிலையில் நேற்று கூட மாவட்ட செயலாளர் ஒருவர் விலகினார். மேலும் இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் அந்த கட்சியில் இருந்து விலகியது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.