
நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அதாவது சீமான் மீது உள்ள அதிருப்தியின் காரணமாகவும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றசாட்டுகளை முன்வைத்து விலகுகிறார்கள். அதுமட்டுமின்றி சீமான் கட்சி பதவிகளில் உழைக்கும் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது எனவும் விலகும் நிர்வாகிகள் கூறும் நிலையில் கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் கூட விலகினார்கள். அதன் பிறகு மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் மற்றும் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் கட்சி பதவியிலிருந்து விலகினர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த இளவஞ்சி சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார். இவர் தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்துள்ளார். மேலும் சீமான் கட்சியிலிருந்து இப்படி அடிக்கடி நிர்வாகிகள் விலகி மாற்றுக் கட்சியில் இணைவது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.