ஈரோட்டில் மாநிலக் கட்சியின் கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் சீமான் சர்ச்சையாக பேசுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, வட நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து தொழில் செய்வது போல் சீமானும் இங்கு வந்து பேசி வருகிறார். இதே போன்று வேறு மாநிலத்தில் தமிழர்கள் வேலை செய்வதை என்ன செய்ய முடியும். தேர்தலில் திராவிடத்திற்கும் தேசியத்திற்கும் ஒருபோதும் போர் கிடையாது. ‌ சீமான் பெரியார் பற்றி பேசுவது பெரிது கிடையாது.

கி வீரமணி பெரியாரை புகழ்ந்து பேசுவதைவிட சீமான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பெரியாரை புகழ்ந்து பேசியுள்ளார். ஆளுநர் ரவி சொன்னது போன்ற தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் தினமும் ஒரு அரசியல்வாதி போல தான் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் எதற்காக திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை போர்த்தி மரியாதை செய்கிறார் என்பது தெரியவில்லை. மேலும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பது போன்று தெரியவில்லை. பாஜகவின் கூட்டணி கட்சி எம்பிக்கள் சொல்லும் கருத்துக்கள் மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று கூறினார்.