அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏர்லிங்டன் நகர் உள்ளது. இங்கு இன்று தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மைக் டைசன் மற்றும் ஜோக் பால் ஆகியோர் மோத இருந்தனர். இதில் மைக் டைசனுக்கு 58 வயது ஆகும் நிலையில் இதுவரை 58 போட்டிகளில் விளையாடி 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இவர் 44 போட்டிகளில் எதிராளியை நாக் அவுட் முறையில் வீழ்த்தினார். இவர் கிட்டதட்ட 6 போட்டிகளில் மட்டும் தோல்வி அடைந்த நிலையில், எதிராளி வீரரின் காதை கடித்தது, போதை பழக்கவழக்கங்கள் மற்றும் பாலியல் புகார் போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதன் காரணமாக போட்டியில் இருந்து அவர் விலகி விலையில் தற்போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டார்.

இவர் இன்று 27 வயதான ஜேக்பால் என்ற வீரருடன் மோத இருந்தார். இவர் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 10-ல் வெற்றி பெற்ற நிலையில் 7 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்றுள்ளார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக மைக் டைசன் மற்றும் ஜேக் பால் இருவரும் போட்டோ எடுப்பதற்காக மேடையில் வந்தனர். அப்போது திடீரென மைக் டைசன் அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டார். இருப்பினும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே கடந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.