இந்தியாவில் மத்திய அரசு சமீபத்தில் சுகன்யா சம்ரிதி கணக்கு வட்டி விகிதங்களை 8 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக உயர்த்தியது. இது ஜனவரி மற்றும் மார்ச் காலாண்டிற்கு பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் வருமான வரி சட்டத்தின் பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். இதனிடையே மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அரசு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கி பயன்பெறலாம். இதில் அதிக வட்டியும் வழங்கப்படும் நிலையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் கல்விக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சேமிக்க விரும்பினால் இப்போதே கணக்கு தொடங்கி பயன் பெறுங்கள்.