
பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா (28) கடந்த 2022 அன்று தனது நண்பர் மற்றும் உறவினருடன் ஜீப்பில் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் கே கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சித்து மூஸ்வாலாவின் தாயார் சரண் கவுர், உயிரிழந்த தன் மகனின் நினைவாக செயற்கை கருத்தரித்தல் முறையில் கருவுற்று குழந்தை பெற்றெடுக்கவுள்ளார். அவருக்கு தற்போது 58 வயதாகிறது.தற்சமயம் வரை தாயும் சிசுவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அடுத்த மாதம் பிரசவம் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.