ஓடிசாவில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக 3 நாட்களில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கடந்த மூன்று நாட்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாலாங்கிர், சம்பல்பூர், ஜார்ஸ்குடா, சோனிபூர், சுந்தர்கர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் வெயிலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஒடிசா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.