பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளால் இணைந்து தேர்வு செய்யப்படுவார். ஆனால் இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே  சபாநாயகரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் பாஜக சார்பில் ஓம் பிர்லா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் கேரளாவைச் சார்ந்த காங்கிரஸ் எம்.பி கொடி குனில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் நாடாளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்க வேண்டும் என பாஜக கட்சி எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்த நிலையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. இதற்கு பாஜக சம்மதம் தெரிவிக்காத நிலையில் தற்போது சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.