இன்றைய வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துமே தொழில் ரீதியாக தான் பார்க்கப்படுகிறது. குடிநீர் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது காற்று கூட டப்பாவில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிட்டது. சுத்தமான குடிநீர் பாட்டிலில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு தங்க நிற பாட்டில்களில் விலை உயர்ந்த நீர் கூட விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை கோடிக்கணக்கான மதிப்பில் இருக்கிறது. இது பற்றிய செய்திகள் கூட வந்துள்ளது. அதாவது அதை தூய குடிநீர் என்று கூறுகிறார்கள்.

இதேபோன்று தற்போது காற்றை கூட டப்பாவில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். அதாவது தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் இந்த டப்பாவை வாங்கி காற்றை சுவாசிக்கலாமாம். இதனை communica என்ற நிறுவனம் இத்தாலியில் உள்ள கோமா ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் விற்பனை செய்கிறது. இந்த தூய காற்று 400 ML விலை 907 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த காற்றை வாங்கி சுவாசித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.