
அசாம் மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் இருக்கிறது. இந்த பூங்காவில் ஜீப் வண்டி சவாரி மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்கு காட்டப்படுகிறது. அந்த வகையில் இந்த சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்த நிலையில் அவர்கள் வனவிலங்குகளை பார்ப்பதற்காக 3 ஜீப் வாகனத்தில் வருகிறார்கள்.
அப்போது ஒரு காண்டாமிருகம் மிகவும் ஆக்ரோஷத்துடன் வந்தது. அந்த சமயத்தில் ஒரு ஜிபிலிருந்து தவறுதலாக தாய் மற்றும் மகள் கீழே விழுந்து விடுகிறார்கள். அவர்கள் உதவி கேட்டு கத்தும் நிலையில் அந்த ஜீப்பை நோக்கி ஒரு காண்டாமிருகம் வருகிறது. உடனே சுதாகரித்துக் கொண்ட அந்த தாய் தன் மகளை தூக்கிக் கொண்டு அவசரமாக ஜீப்பில் ஏறிவிட்டார். இதனால் இருவரும் உயிர்த்தப்பினர். மேலும் இதனை ஒரு சுற்றுலா பயணி தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
“Narrow Escape”: Mother, Daughter Fall in Front of Rhinos at Kaziranga National Park#WATCH #kaziranga #viralvideo #Assam pic.twitter.com/IG47JTa2B7
— Republic (@republic) January 6, 2025