சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஸ்டார் லைனர் விண்கலம் மூலமாக கடந்த மாதம் 5-ம் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஆன சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் சென்ற நிலையில் அவர்கள் இதுவரை பூமிக்கு திரும்பவில்லை. அதாவது விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விரைவில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.

இந்நிலையில் அவர்கள் 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கி தவிக்கும் நிலையில் போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலம் 120 நாட்களில் தானாகவே பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதில் உள்ள 3 சிக்கல்கள் குறித்து அமெரிக்க ராணுவ விண்வெளி அமைப்புகளின் முன்னால் தளபதி ரூடி ரிடோல்ஃபி பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 96 மணி நேர ஆக்ஸிஜன் விநியோகத்துடன் விண்கலம் விண்வெளியில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு பூமியின் வளிமண்டலத்திற்குள் விண்கலம் நுழையும் முயற்சி தோல்வி அடையலாம். ஒருவேளை விண்கலம் செங்குத்தான கோணத்தில் வளிமண்டலத்தில் நுழைந்தால் தரைப்பகுதியை அடைவதற்கு முன்பாகவே தீப்பற்றி எரியக்கூடும் என்று கூறியுள்ளார். மேலும் இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் உயிருடன் பூமிக்கு திரும்புவார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.