அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வீரர் பட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விமான நிலையத்திற்கு  அனுப்பப்பட்டார்கள்.  இந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது சர்வதேச விண்வெளி மையம் சென்ற இவர்கள் இருவரும் திட்டமிட்டபடி ஜூன் 22-ம் தேதியன்று பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸை மீட்க எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா கோரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.