தமிழக பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரசாந்த் விஜய் நடித்துள்ள தி கோட் பட குழுவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அதில் படத்தில் வரும் நாயகன் விஜயின் பெயர் காந்தி எனவும் திருடனாக நடித்துள்ள யோகி பாபுவின் பெயர் சுபாஷ் சந்திரபோஸ் எனவும் இருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட சுபாஷ் சந்திர போஸின் பெயரை இழிவுபடுத்த வேண்டாம்.

படத்திற்காகவும் நகைச்சுவைக்காகவும் கூட ஒரு திருடனுக்கு சுபாஷ் சந்திர போஸ் பெயரை வைக்கக்கூடாது. அதே சமயத்தில் காந்தியையும், சுபாஷ் சந்திரபோஸையும் எதிரில் எதிரானவர்கள் போன்று படத்தில் காட்டியுள்ளனர். எனவே உடனடியாக காந்தி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் பெயர்களை மாற்ற வேண்டும் என தி கோட் பட குழுவினருக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள தி கோட் படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.