
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கத்திற்காக நேற்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்த விஜய் ஏர்போர்ட்டில் இருந்து ரோடு ஷோ நடத்தினார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்து விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் கருத்தரங்க கூட்டத்திற்கு கலந்துகொள்ள ஹோட்டலில் இருந்து கிளம்பிய விஜய் திறந்த வெளி வாகனத்தில் ரோடு ஷோ நடத்தியவாரே சென்றார். இன்றும் அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் குவிந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஹாக்கி மைதானத்தை திறந்து வைப்பதற்காக இன்று கோவை சென்றுள்ள நிலையில் அவரும் ரோடு ஷோ நடத்தினார். திறந்த வெளி வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தியவாரே சென்ற நிலையில் அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் ஒரே நாளில் உதயநிதி மாற்றம் விஜய் ரோல் சோ நடத்தியது கோவையில் பரபரப்பாக பேசப்படுகிறது.