
தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க முடியாது என்றார். அதாவது உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைக்கும் என்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதனை மறுத்த நிலையில் அதிமுக மட்டும் தான் தனித்து ஆட்சி அமைக்கும் என்றார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இது பற்றி பேசினார்.
அவர் கூறியதாவது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த கேள்வி கேட்காதீர்கள் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அதைப்பற்றி பேசி கொள்வார்கள். நீங்கள் சந்தேகங்களை கிளப்பி பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள். திமுகவை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய விருப்பம். இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. எனவே தமிழக மக்களின் நலனுக்காகவும் அதிகரிக்கும் உயர்வு பிரச்சனையை எதிர்க்கவும் யார் வேண்டுமானாலும் இந்த கூட்டணிக்கு வரலாம். மேலும் திமுகவுக்கு எதிராக இருப்பவர்களை கூட்டணிக்கு வரவேற்பது மட்டும்தான் எங்கள் விருப்பம் என்றார்.