
தமிழகத்தில் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதி பெறும் திட்டத்தில் தவறான தகவல்களை அளிப்பவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் படியும் உள்ளாட்சி சட்டங்களின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், அதிகாரிகளின் ஆய்வின்போது விதிமீறல் கண்டறியப்பட்டால் கட்டட உரிமையாளர்கள் அதை சரி செய்ய வேண்டும். கட்டட உரிமையாளர்கள் விதி மீறல்களை சரி செய்டாவிடில் அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.