மத்திய அரசு பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எந்தவித அடமானமும் இல்லாமல் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறுநிதி வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் 3 பிரிவுகளின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி சிஷூ லோன் பிரிவின் கீழ் ரூ.50,000, கிஷோர் லோன் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம், தருன் லோன் பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் என கடன் வழங்கப்படுகிறது.

ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்த செயலாக்க கட்டணமும் செலுத்த வேண்டாம். ஆனால் இந்த கடனை ஒரு வருடம் முதல் 5 வருடத்திற்குள் அடைக்க வேண்டும். ஒருவேளை 5 வருடத்தில் கடனை அடைக்க முடியாவிட்டால் அடுத்த 5 வருடங்களுக்கு நீடித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த நிதி உதவி ‌ தனியார் நிறுவனங்கள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த கடனை பெற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் கடன் பெற இணையதளத்தில் mudra.org.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.