வடக்கு கரோலினாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவருக்கு முழு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் புல்லட் ப்ரூப் கண்ணாடி அரண் அமைக்கப்பட்டிருந்தது. அதன் உள்ளே நின்று அவர் உரையாற்றி கொண்டிருந்தார். இந்த உரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக நடைபெற்றது.

அப்போது பேசிக் கொண்டிருந்த டிரம்ப் திடீரென தன்னுடைய மைக்ரோ போனில் தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று கூறினார். அதோடு வெப்பம் அதிகமாக இருக்கிறது என்று கூறிய அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

மேலும் ஏற்கனவே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நூலிழையில் உயிர்பிழைத்த ட்ரம்ப் தற்போது பேசிக் கொண்டிருக்கும்போது உரையை நிறுத்தி இவ்வாறு கூறிய சம்பவம் அங்கு இருந்தவர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது.