
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வரும் நிலையில் நேற்று முன்தினம் அகோரி ஒருவரும் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர் ஒரு காரில் மண்டை ஓடுகளுடன் அங்கு வந்த நிலையில் அதை ஓரமாக நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றார்.
இதைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த காரின் நம்பர் பிளேட்டில் ஒருவித பலகை தொங்கப்பட்டிருந்தது. அதில் அகோரி நாகசாகி என்று எழுதப்பட்டிருந்தது. இது குறித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை டவுன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அகோரியிடம் விசாரணை நடத்தியதில் வாரணாசியில் இருந்து அவர் வந்திருப்பது தெரிய வந்தது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற குற்றத்திற்காக காருக்கு ரூ.3000 அபராதம் விதித்து அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர்.