
காட்டுக்குள் சுற்றுலா சென்ற பெண்களை கரடி ஒன்று கட்டிபிடித்தால் அவர்கள் அலறினர். இதையடுத்து கரடியிடம் இருந்து தப்பிக்க பெண்கள் எடுத்த முயற்சி வீடியோவாக இணையத்தில் வைரலாகி உள்ளது. வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்ற பெண்கள் இயற்கையின் அழகை ரசித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் கரடி என்ட்ரி கொடுக்கிறது.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள் பயத்தில் நின்றுக் கொண்டிருந்தனர். பின் கரடி பெண்களின் பக்கத்தில் சென்று அவர்களை கட்டி பிடித்துக் கொள்கிறது. எனினும் பெண்கள் அதனிடம் இருந்து தப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக பெண்கள் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்து விட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
How to survive a bear attack… stand still and stay silent 🤫😳 pic.twitter.com/OfZuYvksi3
— Terrifying Nature (@TerrifyingNatur) May 22, 2023