
சென்னை மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் தனியார் பிசியோதெரபி கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர்.
கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு கல்லூரியிலேயை தங்கினார். பின்பு காலை 6.30 மணி அளவில் ஆழியாறு அணைக்கு குளிக்க சென்றனர். அப்போது ஜோசப் ஆண்டன் ஜெனிப்(21) மற்றும் ரேவந்த்(21) மற்றும் தருண் விஷ்வரங்கன்(19) ஆகிய மூண்று மாணவர்களும் நீருக்குள் மூழ்கினர். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் நீருக்குள் மூழ்கியவர்களை காப்பாற்றும் படி கத்தி கூச்சலிட்டனர்.
அப்போது அங்கிருந்த அப்பகுதி மக்கள் மூழ்கியவர்களை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தனர். இருப்பினும் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூரி மாணவரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.