உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு உள்ள சுவர்களில் இந்து கடவுள்களின் உருவங்கள் அதாவது சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அந்த சுவரின் முன்பாக நின்று சிலர் நாகரிகமான முறையில் சிறுநீர் கழிக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடங்களில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகத்தான் இது போன்ற வரைபடங்கள் வரையப்படுகிறது. ஆனால் அதனையும் மீறி சிலர் இப்படி அருவருப்பான செயல்களில் ஈடுபடுவது முகம் சுளிக்க வைப்பதோடு பொது இடங்களை இப்படி அசிங்கப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறியுள்ளது.

 

மேலும் இது போன்ற செயல்கள் நாட்டின் மதம் மற்றும் பண்பாட்டை சீர்குலைக்கும் விதமாக இருப்பதாக சிலர் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.