
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது பத்து வாரங்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து 12 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் மீண்டும் உள்ளே வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். தற்போது 70 நாட்களை கடந்து செல்லும் நிலையில் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிவதற்கு இன்னும் நான்கு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் கூல் சுரேஷ் விபரீத முடிவை எடுத்துள்ளார். அவருக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. வீட்டிலிருந்து வெளியேற நினைத்து பிக் பாஸ் சுவரை ஏற முயன்றுள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் அவரை அழைத்து பேசி சமாதானம் செய்தார். அது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.