தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் கல்விக்கான நிதியை தருவோம் என்று மத்திய பாஜக அரசு கூறியுள்ளது. ஆனால் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியதோடு எவ்வளவு கோடி நிதி கொடுத்தாலும் கண்டிப்பாக மும்மொழி கல்விக் கொள்கையை மட்டும் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால் பாஜகவினர் திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் மும்மொழி கல்வி கொள்கை இருப்பதாகவும்அரசு பள்ளிகளில் மட்டும் இரு மொழிக் கொள்கை இருப்பதாகவும் திமுகவினர் செய்வது சரி கிடையாது என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் மத்திய இணை மந்திரி எல். முருகன் சமீபத்தில் சொன்ன ஒரு விஷயம் சர்ச்சையாக மாறிய நிலையில் அதற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ஹிந்தியை மூன்றாவது மொழியாக சேர்க்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. மூன்றாவது மொழியாக இந்தியை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் கூறுகிறோம். திமுகவினருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் ரயிலில் ஏறி கும்மிடிபூண்டியை தாண்டி விட்டால் ஒருவர் திட்டினால் கூட தெரியாது. சிரித்துக் கொண்டே திட்டுவார்கள் நமக்கு புரியாது. எனவே தமிழ் மொழி போன்று இன்னொரு மொழியையும் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் இதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினார்.

இதற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, ஹிந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்களை ஹிந்தியில் திட்டும்போது பதிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை தமிழில் திட்டக்கூடாதா.? சுயமரியாதை உணர்வும் சூடு சொரணை உள்ள தமிழர்களும் அப்படித்தான் செய்வார்கள். பாஜகவினர் எப்படியோ என்று விமர்சித்துள்ளார். மேலும் ஹிந்தி என்ற முகமூடியில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்வதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.