விழுப்புரம் மாவட்ம்  விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந் புகழேந்தி காலமான நிலையில், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் 10-ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இதனால் திமுக, அதிமுக என்ற போட்டியானது தற்போது மாறி, திமுக – பாமக என்று தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் இடைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவினர் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சீமான் பரப்புரையில் கேட்டுக் கொண்டார். அதன்படி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற பரப்புரையில், அதிமுக, தேமுதிகவுக்கு ஆரம்ப காலங்களில் வேலை செய்துள்ளேன். நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. நம்முடைய ஒட்டுமொத்த எதிரியான திமுகவை வீழ்த்த நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.