கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகி கௌரி அணில் சம்பேகர் என்ற மனைவி இருந்துள்ளார். இதில் ராகேஷ் தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் தகராறு ஏற்படும் போதெல்லாம் ராகேஷ் மனைவியை தாக்கியுள்ளார். அந்த வகையில் நேற்று முன்தினமும் கணவன் மனைவிக்கு இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரத்தில் ராகேஷ் தன் மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தியதோடு பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதைத்தொடர்ந்து தன் மனைவியின் உடலை வீட்டில் சமையல் அறையில் ஒரு சூட்கேசில் அடைத்து வைத்துவிட்டு தன் மாமியார் வீட்டுக்கு செல் போன் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறிவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இது தொடர்பாக வீட்டில் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராகேஷ் மனைவி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு புனேவிற்கு தப்பி செல்ல முயன்ற அவரையும் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் அவருடைய மனைவியின் உடல் துண்டுகளாக வெட்டப்படவில்லை முழுமையான உடல் அப்படியே சூட்கேசில் தான் வைக்கப்பட்டுள்ளது.

அதோடு தன் மாணவியை கொலை செய்த பிறகு ராகேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  புனே செல்வதற்காக சென்று அவரை போலீசார் கைது செய்த நிலையில் அவர் விஷம் குடித்தது தெரிய வந்ததால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.