
இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தக சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் மிகச் சிறிய குழந்தைகள் கூட தங்கள் வலிமைக்கு அதிகமான எடையுடைய பையை சுமந்து பள்ளிக்கு செல்கிறார்கள். இதை பார்க்கும்போது நமக்கே பாவமாக இருக்கிறது. அந்த வகையில் குழந்தைகளின் புத்தக சுமையை குறைப்பதற்காக கேரள அரசு ஒரு அதிரடி திட்டத்தை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு புத்தக சுமை அதிகமாக உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர். இதற்காக கேரள மாநில கல்வி அமைச்சரான வி சிவன் குட்டி கல்வி ஆலோசர்களிடம் கலந்து பேசி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது 1 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் புத்தகப் பையின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரை இருக்கலாம் என்றும் 10 ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரை இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஒரு மாதத்தில் குறைந்தது 4 நாட்கள் மாணவர்கள் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம் என்ற இந்தத் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அமலுக்கு வரும் இந்த திட்டத்தால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.