
தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பால் பொருள்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதாவது பால் மட்டும் தவிர்த்து பிற பால் பொருட்களை அதாவது நெய் உள்ளிட்ட பிற பொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஆவின் நிறுவனத்தில் விற்பனை பாதிக்கப்படாது என்றும் இது ஒரு கூடுதல் வியாபாரமாக தான் இருக்கும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி முதல் கட்டமாக பாக்கெட்டுகளில் 100 கிராம் நெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும் விரைவில் ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருள்களும் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.