
இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது யுபிஐ செயலின் மூலம் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை எளிதாக பொருட்கள் வாங்கிய பிறகு பணத்தை அனுப்ப முடியும் என்பதால் பலரும் அதை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் யுபிஐ செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு யுபிஐ செயலியை குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் என 5 பேர் வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் நிறுவனம் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இனி பெற்றோர்களின் வங்கிக்கணக்கை குழந்தைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த புதிய அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.