விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், அதிகளவு முதலீடுகளை ஈர்க்கவும், மேலும் உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024  வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக விண்வெளி துறையில் அடுத்த 10 வருடங்களில் 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சுற்றியுள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை Space Bayஆக ஊக்குவித்து, அந்த 4 மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும்  முடிவு செய்துள்ளது.