பொதுவாக முன்பெல்லாம் மக்கள் நிலங்களை அளவீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்தார்கள். இந்த நிலையில் பொதுமக்கள் இனி நேரில் செல்லாமல் https: tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கும் புதிய முறையை தமிழக அரசு 2023 ஆம் வருடம் முதல் நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக பொதுமக்கள் நில அளவையை எந்த நேரத்திலும் நில அளவை கட்டணம்  உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தி வங்கிகளுக்கு நேரில் செல்லாமல்  citizen portal இணையத்தின் மூலமாகவே செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தற்போது இந்த சேவை அனைத்து இ சேவை மையங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தங்களுடைய நிலங்களை அளவீடு செய்வதற்கு பொது சேவை மையத்தை அணுகி நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க முடியும். மேலும் நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன்  மூலமாக தெரிவிக்கப்படும். நில அளவை செய்யப்பட்ட பிறகு மனுதாரர் மற்றும் நில அளவை கையொப்பம் அறிக்கை வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் http//sservice.tn.gov.in/  இணையதள சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.