இந்திய ரயில்வேயில், உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9,970 காலியிடங்கள் இந்தியாவின் பல்வேறு மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வுகளை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) நடத்த உள்ளது.

கல்வித் தகுதி:
இந்த பணிக்கான விண்ணப்பதாரர்கள், ஐடிஐ / டிப்ளமோ / பி.இ / பி.டெக் போன்ற துறைசார்ந்த தொழில்நுட்ப படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
ஜூன் 1, 2025, 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, ஒடுக்கப்பட்டோர் மற்றும் ரிசர்வ் பிரிவினருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை:

ஆன்லைன் கணினி அடிப்படையிலான தேர்வு.

ஆவணச் சோதனை.

மருத்துவ பரிசோதனை.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: மே 5, 2025

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள், https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.