
மத்திய அரசின் சார்பில் பொதுமக்களின் நன்மைக்காக வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்கள் மூலமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஓய்வூதிய திட்டங்கள் பல இருக்கும் நிலையில் அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இணையலாம்.
அதன்பிறகு 60 வயது வரையில் இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் பபயனர்கள் செலுத்தும் தொகையை பொறுத்து அவர்களுக்கு 1000. ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையில் மாதம் பென்ஷன் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் 18 வயது முதல் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வந்தால் மாதம் 5000 வரை ஓய்வூதிய காலத்தில் பென்ஷன் கிடைக்கும்.