
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இன்று அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தன்னுடைய x பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அந்த பதிவில், பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து குறிப்பாக சில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது ரஜினிகாந்துக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) December 12, 2024