
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்தது. இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 67 ரன்களும் ரஜத் படிதார் 64 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) April 7, 2025
இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சூரியகுமார் அடித்த பந்தை டிக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா கேட்ச் எடுப்பதற்காக கைக்காட்டி அந்த பந்தை பிடிக்க ஓடினார். அந்தப் பந்தை கவனித்த யஸ் தயாளும் இடது புறமாக ஓடி கேஷ் எடுக்க முயன்ற நிலையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர். இதில் யஸ் தயாள் தான் கையில் வைத்திருந்த பந்தை தரையில் போட்டார். அப்போது விராட் கோலி கோபத்தில் தன்னுடைய தொப்பியை கீழே எறிந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.