தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல ராதிகாவை எம்.பி-யாக்குவேன் என நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிடும் நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான். காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை. மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்தார்.