தமிழக வெற்றி கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமார். இவர் சூர்யா நகர் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் வாழ தகுதியற்றவையாக 60 வீடுகள் இருக்கும் நிலையில் அதனை தமிழக அரசு சரி செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழக அரசை கண்டித்து அந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக வெற்றி கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று அந்த மக்களை நேரில் சந்தித்து சுகுமார் உறுதி கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.