
தமிழ் சினிமாவில் சிறுத்தை, வீரம், விசுவாசம், அண்ணாத்த போன்ற பல வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் சிறுத்தை சிவா தற்போது சூர்யா 42 படைத்த இயக்கி வருகிறார். வரலாற்று காப்பியத்தை மையப்படுத்தி எடுத்து வரும் சூர்யா 42 படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் நடிகை திஷா பதானிக்கு படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பறந்து பறந்து அடிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram