
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த கங்குவா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா தன் 45-வது படத்தில் நடித்து வரும் நிலையில் திரிஷா ஹீரோயின் ஆக நடிக்கிறார். அதன் பிறகு தன்னுடைய 44 வது படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று டைட்டில் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.