
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் திறந்து கிடக்கும் கழிவு நீர் கால்வாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது இந்த பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் கழிவு நீர் வலிந்து வருகின்றது.
இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தலையீடு செய்து பேருந்து நிலையத்தில் திறந்து கிடக்கும் கால்வாய்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.