
அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த அவருக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ஜாமின் வழங்கியது. இதைத்தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் பதவி ஏற்றது குறித்து தற்போது முதல்வர் ஸ்டாலின் ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் நான் செந்தில் பாலாஜியை வாழ்த்தியதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதி செயல்களை செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டுள்ளது. அதற்கு விலையாகத்தான் அவர் 15 மாதக்காலம் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் முன்னதாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உன்னுடைய தியாகம் மிகப்பெரியது என்று பாராட்டியிருந்தார். இதன் காரணமாக எதிர்க்கட்சியினர் ஊழல் செய்து சிறைக்கு சென்று வந்தவரை தியாகி என்று குறிப்பிடுவதா என முதல்வரை விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்படும் திரு. @Udhaystalin அவர்களுக்குத் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்குத் துணையாக அல்ல; நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார்!
அமைச்சரவையில் இணைந்துள்ள @V_Senthilbalaji,… pic.twitter.com/YKiwdWOF1d
— M.K.Stalin (@mkstalin) September 29, 2024