
செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது இரு தரப்பும் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்க இரண்டு மணி நேரம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.