
சென்னையிலிருந்து காதலனை பார்க்க வந்த 14 வயது சிறுமி தஞ்சாவூரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ஒரு 14 வயது சிறுமியும் ஒரு வாலிபரும் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நிலையில் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அவர்கள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
அதாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஜெகதீஸ்வரன் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் சென்னையில் வேலை பார்த்தபோது நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி பழகி வந்தார். இந்நிலையில் வாலிபர் தஞ்சைக்கு வந்த நிலையில் அந்த சிறுமியிடம் நீயும் தஞ்சைக்கு வா என்று கூறியுள்ளார். தன் காதலன் அழைத்ததை நம்பி சிறுமி தஞ்சைக்கு வந்த நிலையில் வாலிபர் சிறுமியை பார்க்க வரவில்லை. அதாவது கடந்த 13ஆம் தேதி வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சிறுமி வெளியேறிய நிலையில் தான் தஞ்சாவூருக்கு வந்த செய்தியை வாலிபரிடம் கூற அவர் இப்போது பேசிக் கொண்டிருக்கும் சிம் கார்டை கழட்டிவிட்டு வேறு ஒரு சிம் கார்டை மாற்றி பேசு என்று கூறியுள்ளார்.
அதை நம்பி சிறுமியும் சிம் கார்டை மாற்றி பேசிய நிலையில் தஞ்சை வந்த பிறகு வாலிபருக்கு போன் போட அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அந்த சிறுமி செய்வதறியாது அழ ஆரம்பித்தார். அந்த சிறுமி அழுவதை பார்த்த ஒருவர் அவரிடம் விசாரிக்க சிறுமி நடந்த விவரங்களை கூறுகிறார். இதனையடுத்து அந்த நபர் நீ என்னுடைய வீட்டிற்கு வா உன்னை நான் உன் காதலனுடன் சேர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி சிறுமியும் அவருடைய வீட்டிற்கு சென்ற நிலையில் கிட்டத்தட்ட 3 நாட்களாக அடைத்து வைத்து அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமியை பேருந்தில் ஏற்றி ஊருக்கு விடுவதற்காக பஸ் ஸ்டாண்ட் அழைத்து வந்த போது தான் போலீசில் சிக்கியுள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்தது லாரி ஓட்டுனரான புவனேஸ்வரன் (30) என்பது தெரியவந்துள்ளது. அதாவது தன்னுடைய மனைவி வீட்டில் இல்லாததால் புவனேஸ்வரன் சிறுமியை அங்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் புவனேஸ்வரனை கைது செய்த காவல்துறையினர் ஜெகதீஸ்வரனையும் கைது செய்துள்ளனர். மேலும் இதைத் தொடர்ந்து சிறுமியை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.