புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று மின்சார ரயில் சேவை கிடையாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வெள்ளம் முழுவதுமாக வடிந்தால் மட்டுமே மீண்டும் ரயில் சேவை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.