இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 17 அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறைகள் வருவதால் சென்னையில் வசித்து வரும் வெளியூர் வாசிகள் பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

அதனால் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவையில் நெரிசல் மிகு நேரத்தில் செப்டம்பர் 15 அதாவது இன்று ஒரு நாள் மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுவதற்கு பதில் ஆறு நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.