தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படுவதால் அன்றைய நாள் மின்தடை செய்யப்படும். இது குறித்து அறிவிப்பு அப்பகுதிகளுக்கு முன்னதாகவே வெளியிடப்படும் நிலையில் சென்னையில் ஜூலை 23 இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சோளிங்கநல்லூர், மயிலாப்பூர், அண்ணா நகர், மதுரவாயல், ஐடிசி, போரூர், திருவான்மியூர், அடையார், தாம்பரம், ஆவடி மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மின்புநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மின்விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.