தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் இந்த புயல் தற்போது சென்னையில் இருந்து தென்கிழக்காக 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது படம் மேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலின் மேற்கு மற்றும் மத்திய பகுதியில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேக காற்றுடன் அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் இந்த மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் புயல் காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் டிசம்பர் நான்காம் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது