
தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும் இணைந்து இன்று மே 19ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதில் எட்டாம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.